/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேசிய நெடுஞ்சாலை சேதம் ; வாகன ஓட்டிகள் புலம்பல்
/
தேசிய நெடுஞ்சாலை சேதம் ; வாகன ஓட்டிகள் புலம்பல்
ADDED : பிப் 06, 2024 12:32 AM

கூடலுார் : கூடலுார் - லோயர்கேம்ப் தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் தார் பெயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் புலம்பியுள்ளனர்.
கூடலுாரில் இருந்து லோயர்கேம்ப் வரை உள்ள 9 கி.மீ., தூர தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் தார் பெயர்ந்து சேதம் அடைந்துள்ளது.
கடந்த சபரிமலை சீசனில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இவ்வழியே கடந்து சென்றுள்ளன. அனைத்து வாகனங்களுக்கும் வீரபாண்டி அருகே டோல்கேட்டில் கட்டணம் வசூல் செய்த போதிலும் சேதமடைந்த சாலையை சீரமைக்காமல் மெத்தனம் காட்டப்பட்டு வருகிறது. தமிழக கேரள எல்லையை இணைக்கும் முக்கிய வழித்தடமாக உள்ளதால் வாகனப் போக்குவரத்து அதிகம். பல மாதங்களாக சீரமைக்காமல் இருப்பதால் வாகன ஓட்டிகள் புலம்பி செல்கின்றனர்.