/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
காட்டு மாடுகளால் சந்தன மரங்கள் சேதம் அரசுக்கு ரூ. கோடி கணக்கில் இழப்பு

ADDED : ஏப் 04, 2025 05:40 AM

மூணாறு: மறையூரில் காட்டு மாடுகள் சந்தன மரங்களை சேதப்படுத்தி வருவதால் அரசுக்கு ரூ. கோடி கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் மூணாறு அருகில் உள்ள மறையூரில் 97 சதுர கி.மீ., சுற்றளவில் 50 ஆயிரத்துக்கும் அதிகமாக சந்தன மரங்கள் உள்ளன.
அவை இயற்கை சீற்றங்கள், கடத்தல் ஆகியவற்றின் மூலம் அழிந்து வரும் நிலையில் தற்போது காட்டு மாடுகள் சந்தன மரங்களை அழித்து வருகின்றன.
சந்தன மரங்கள் அதிகம் உள்ள நாச்சிவயல் பகுதியில் காட்டுமாடு, புள்ளி மான் உள்பட பல்வேறு வன விலங்குகள் அதிகம் உள்ளன. அப்பகுதியில் கோடை காலங்களில் வனத்துறையினர் அடிக்காடுகளை வெட்டி அகற்றி விடுகின்றனர்.
அதனால் வனவிலங்குகள் தீவனம் கிடைக்காமல் திண்டாடும் நிலை ஏற்படுவதால் அருகில் உள்ள விளை நிலங்களில் புகுந்து விடுகின்றன. இது ஒரு புறமிருக்க காட்டு மாடுகள் சந்தன மரங்களை சாய்த்து இலைகளை தீவனமாக்கி கொள்கின்றன.
குறிப்பாக பாதி விளைந்த நிலையிலான மரங்களை சாய்க்கின்றன. அது போன்று நூற்றுக்கணக்கான மரங்கள் சாய்க்கப்பட்டதால் அரசுக்கு ரூ.பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. சந்தன மரங்களை பாதுகாக்கும் வகையில் வனவிலங்குகளுக்கு தேவையான தீவனத்தை வழங்க வனத்துறையினர் முன்வர வேண்டும்.