/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குன்னுார் வைகை ஆறு பாலத்தின் தடுப்புச்சுவர் சேதம்
/
குன்னுார் வைகை ஆறு பாலத்தின் தடுப்புச்சுவர் சேதம்
ADDED : அக் 24, 2025 02:49 AM

தேனி: தேனி அருகே குன்னுாரில் தேசிய நெடுஞ்சாலையில் வைகை ஆற்றின் மேல் பாலங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இதில் பழைய பாலத்தின் வழியாக தேனியில் இருந்து மதுரை, ஆண்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் செல்கின்றன. இந்த பாலத்தின் பக்கவாட்டு தடுப்புச் சுவர்கள் பல இடங்களில் சேதமடைந்து உள்ளன. கம்பிகள் வெளியே தெரியும் நிலை உள்ளது. வெள்ளம் அதிகம் செல்லும் நாட்களில் அவ்வழியாக செல்பவர்கள் பாலத்தின் மீது நின்று செல்பி, புகைப்படங்கள் எடுக்கின்றனர். இந்நிலையில் சேதமடைந்த தடுப்புகளில் சாய்ந்தவாறு நின்றாலோ, பிடித்து இழுத்தால் ஆற்றில் விழுந்து உயிரிழப்புகள் ஏற்படலாம். எனவே மாவட்ட நிர்வாகம், தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் தடுப்பு சுவர்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

