/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆண்டிபட்டி வாரச்சந்தை அருகே சேதமடைந்த பாலம்
/
ஆண்டிபட்டி வாரச்சந்தை அருகே சேதமடைந்த பாலம்
ADDED : ஜூலை 27, 2025 12:26 AM

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி வாரச்சந்தை அருகே ஓடையின் குறுக்கே சேதமடைந்த பாலம் பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
ஆண்டிபட்டி பேரூராட்சி 15 வது வார்டு நாடார் தெரு செல்லும் வழியில் வாரச்சந்தை அருகே ஓடையின் குறுக்கே கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பாலம் அமைக்கப்பட்டது. தற்போது பாலம் சேதமடைந்து நீர் வெளியேறும் பகுதியில் ஏற்பட்டுள்ள அடைப்பால் மழைக்காலத்தில் ஓடையில் வரும் நீர் குடியிருப்புகளில் புகுந்து விடுகிறது. ஆண்டிபட்டி வாரச்சந்தையில் இருந்து பாலம் வழியாக ஆண்டிபட்டி பஸ் ஸ்டாண்ட், பாலாஜி நகர், ஏத்தக்கோவில் ரோடு ஆகிய பகுதிகளுக்கு தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் சென்று திரும்புகின்றனர். ஆட்டோ இருசக்கர வாகனங்களும் இந்த பாலத்தை கடந்து செல்கின்றன. பாலத்தின் இருபுறமும் தடுப்புகள் இல்லை. பாலத்தின் கான்கிரீட்டும் பலம் இழந்து உள்ளது. பாலத்தை அகற்றி இப் பகுதியில் புதிய பாலம் அமைக்க பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். சேதமடைந்த பாலத்தை அப்புறப்படுத்தி இருபுறமும் தடுப்புகளுடன் கூடிய புதிய பாலம் அமைக்க ஆண்டிபட்டி பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.