/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வீட்டின் கான்கிரீட் சேதமடைந்து மழைநீர் புகுவதால் சிரமம்; அம்மாபட்டி இந்திரா காலனியில் வசதிகள் இன்றி தவிப்பு
/
வீட்டின் கான்கிரீட் சேதமடைந்து மழைநீர் புகுவதால் சிரமம்; அம்மாபட்டி இந்திரா காலனியில் வசதிகள் இன்றி தவிப்பு
வீட்டின் கான்கிரீட் சேதமடைந்து மழைநீர் புகுவதால் சிரமம்; அம்மாபட்டி இந்திரா காலனியில் வசதிகள் இன்றி தவிப்பு
வீட்டின் கான்கிரீட் சேதமடைந்து மழைநீர் புகுவதால் சிரமம்; அம்மாபட்டி இந்திரா காலனியில் வசதிகள் இன்றி தவிப்பு
ADDED : ஜூலை 12, 2025 03:56 AM

போடி : போடி ஒன்றியம் அம்மாபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட இந்திரா காலனியில் ரோடு சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியதால் மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
அம்மாபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட முதலாவது வார்டு மேற்கு தெரு இந்திரா காலனி. இங்கு 100 குடும்பங்கள் உள்ளன. 25 ஆண்டுகளுக்கு முன்பு இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் 60 தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டன. இவை உரிய பராமரிப்பு இல்லாததால் பல வீடுகளின் கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. மழைக் காலங்களில் மழை நீர் உள்ளே புகுந்து குடியிருக்க முடியாமல் சிரமம் அடைகின்றனர்.
சாக்கடை தூர்வாராததால் வீடுகளுக்கு முன் தேங்கிய கழிவுநீரில் கொசு உற்பத்தியாகி இரவு பகலாக கடிக்கிறது. அடிப்படை வசதிகள் செய்து தர ஊராட்சியில் மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. இது குறித்து பொது மக்கள் கூறியதாவது:
இருளில் தவிக்கும் தெருக்கள்
கார்த்திக், அம்மாபட்டி : இந்திரா காலனி தெருக்களில் மின் விளக்கு எரியாதால் இரவில் ஊரே இருளில் மூழ்குகிறது. இதனால் பெண்கள் வெளியே வர அச்சம் அடைகின்றனர்.
நடுத்தெருவில் சாக்கடை சிறுபாலம் சேதம் அடைந்து ஓராண்டாகியும் சீரமைக்காததால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகின்றன. சாக்கடை சுத்தம் செய்யாததால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் சீராக செல்ல முடியாமல் அதில் பாலிதீன் குப்பை தேங்கி உள்ளன. இதனால் கொசு உற்பத்தி அதிகரித்து சுகாதாரகேடு ஏற்படுகிறது. சாக்கடை தூர்வாரி தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பயன்பாட்டிற்கு வராத சமுதாய கூடம்
விஜயகுமார்,அம்மாபட்டி: ரோடு அமைத்து 15 ஆண்டுகளுக்கு மேலானதால் தெருவில் கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளன. வாகனங்கள் மட்டுமின்றி மக்கள் நடந்து செல்ல சிரமம் அடைகின்றனர். தொகுப்பு வீடுகளில் சுவர்கள் விரிசல் ஏற்பட்டு வீட்டின் உள்ளே மேல் தள கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரியும் அளவிற்கு சேதம் அடைந்து உள்ளன.
இதனால் மக்கள் அச்சத்துடன் வசிக்கின்றனர். போக்குவரத்திற்கு இடையூறாக தெருவின் நடுவே அடிபம்பு பயனற்று உள்ளது.
எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ. 25 லட்சம் மதிப்பில் சமுதாயகூடம் கட்டி முடிக்கப்பட்டு இரண்டு மாதம் ஆகியும் திறக்கப்படாமல் உள்ளது. சேதம் அடைந்த வீடுகளை சீரமைப்பதோடு, ரோடு வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
சேதமடைந்த மின் கம்பம்
பெருமாள், அம்மாபட்டி : பெண்கள் சுகாதார வளாகம் சீரமைக்கப்பட்டு பல மாதங்களாக திறக்கப்படாமல் உள்ளது. இதனால் பெண்கள் திறந்த வெளியில் முட்புதர்களை நாடி செல்லும் அவல நிலை தொடர்கிறது.
அம்மாபட்டியில் இருந்து போடிக்கு போதிய பஸ் வசதி இல்லாததால் கூடுதல் கட்டணம் கொடுத்து ஆட்டோவில் செல்லும் நிலை உள்ளது. அம்மாபட்டி மெயின் ரோட்டில் பயணிகள் நிழற்குடை சேதம் அடைந்து 2 ஆண்டுகள் ஆகியும் சீரமைக்காமல் உள்ளது. தெருக்களில் மின்கம்பம் துருப்பிடித்து கிழே விழும் நிலையில் உள்ளதால் மக்கள் நடந்து செல்ல அச்சம் அடைந்து வருகின்றனர். சேதம் அடைந்த மின் கம்பங்களை மாற்றி அமைத்திட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.