/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கேட் வால்வு சேதம் வீணாகும் குடிநீர்
/
கேட் வால்வு சேதம் வீணாகும் குடிநீர்
ADDED : ஜூன் 01, 2025 12:30 AM

கூடலுார்: கூடலுார் இந்து ஆரம்பப்பள்ளி அருகே கேட்வால்வு சேதமடைந்துள்ளதால் குடிநீர் வீணாக வெளியேறுகிறது.
ஆரம்பப் பள்ளி அருகே மாநில நெடுஞ்சாலையில் குடிநீர் கேட்வால்வு அமைக்கப்பட்டுள்ளது. பல நாட்களாக சேதமடைந்துள்ள நிலையில் குடிநீர் வீணாக வெளியேறி நெடுஞ்சாலையில் ஓடுகிறது.
மாநில நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணி 2 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கும் போதே குடிநீர் குழாய்களை மாற்றி அமைக்க வலியுறுத்தப்பட்டது.
ஆனால் இதை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் குழாயின் மீதே ரோடு அமைக்கப்பட்டது. இதனால் குழாய் அடிக்கடி உடைந்து வருகிறது. மேலும் குழாய் சேதமடையும் போது வெளியேறும் தண்ணீரால் ரோடும் பாதிக்கப்படுகிறது.
அரச மர பஸ்ஸ்டாப், பழைய தபால் நிலையம், இந்து ஆரம்பப் பள்ளி ஆகியவற்றிற்கு அருகே மெயின் குழாய் அடிக்கடி சேதம் அடைந்து வருகிறது.
மேலும் இந்து ஆரம்பப் பள்ளி அருகே குடிநீர் கேட்வால்வு ரோட்டின் மட்டத்தை விட உயரமாக இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.