/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கேட் வால்வு சேதம் வீணாகும் குடிநீர்
/
கேட் வால்வு சேதம் வீணாகும் குடிநீர்
ADDED : ஆக 07, 2025 07:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார் : கூடலுார் கருணாநிதி காலனி அருகே மாநில நெடுஞ்சாலையில் பகிர்மான குழாய் கேட்வால்வு உள்ளது. சேதமடைந்து சில நாட்களாக குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது.
கேட்வால்வை சுற்றிலும் தேங்கி நிற்கும் தண்ணீர் மீண்டும் குழாய்க்குள் சென்று சுகாதாரக் கேட்டை ஏற்படுத்துகிறது. ஏற்கனவே சீதோஷன நிலை மாற்றத்தால் மக்கள் காய்ச்சலால் அவதிப்பட்டு வரும் நிலையில் சுகாதாரக் கேடான குடிநீர் சப்ளை ஆவதால் மேலும் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. உடனடியாக சீரமைக்க நகராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும்.