/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பார்வை இழந்தவர்களுக்கு உதவும் சென்சார் கண்ணாடி கண்டுபிடிப்பு பிளஸ் 2 மாணவர் அசத்தல்
/
பார்வை இழந்தவர்களுக்கு உதவும் சென்சார் கண்ணாடி கண்டுபிடிப்பு பிளஸ் 2 மாணவர் அசத்தல்
பார்வை இழந்தவர்களுக்கு உதவும் சென்சார் கண்ணாடி கண்டுபிடிப்பு பிளஸ் 2 மாணவர் அசத்தல்
பார்வை இழந்தவர்களுக்கு உதவும் சென்சார் கண்ணாடி கண்டுபிடிப்பு பிளஸ் 2 மாணவர் அசத்தல்
ADDED : ஆக 07, 2025 07:03 AM

கூடலுார் : கண்பார்வை இழந்தவர்களுக்கு உதவும் வகையில் புதிய கருவியை பள்ளி மாணவர்கள் கண்டுபிடித்து அசத்தி உள்ளனர்.
கண்பார்வை இழந்தவர்கள் ரோட்டில் நடந்து செல்லும் போது கையில் ஸ்டிக்கை பயன்படுத்தி செல்வார்கள்.
பிறவியிலேயே கண் பார்வை இழந்தவர்களுக்கு பல்வேறு தொழில் நுட்பங்களை பயன்படுத்தி தொடு உணர்வு மூலம் பல்வேறு கருவிகளை கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதில் ஹெல்மெட், கண் கண்ணாடி, சென்சார் உள்ளிட்ட பல வகையான தயாரிப்புகள் வெளிவந்துள்ளன. இது தயாரிப்பதற்கான செலவு சற்று அதிகமாக இருக்கும்.
இந்நிலையில் குறைந்த செலவில் எடை குறைவான கண் கண்ணாடியை பார்வை இழந்தவர்களுக்காக கண்டுபிடித்துள்ளார் கூடலுார் திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவர் ஏ.கார்த்திக். இதனை பள்ளியில் காட்சிப்படுத்தினார்.
இதுகுறித்து மாணவர் கூறும்போது:
பிளஸ் 1 படிக்கும் போது ரேடார் பாடத்தில் கூறப்பட்ட தகவல்கள் மூலம் கண் பார்வை இழந்தவர்களுக்கு புதிய கருவி கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.
கண்ணாடி அணிந்து கொண்டு நடந்து செல்லும் போது 3 அடி தூரத்தில் பொருட்கள் இருந்தால் சென்சார் மூலம் உடனடியாக அதிர்வு ஒலி ஏற்படுத்தி தெரிந்துகொள்ளும் வகையில் கண்ணாடியை வடிவமைத்துள்ளேன். இதற்கு கண் கண்ணாடி, சென்சார், நேனோ போர்டு, சிறிய பேட்டரி பொருட்கள் தேவை. இவை அனைத்தும் மொத்தம் 200 கிராம் எடையாகும். மொத்த செலவு 2 ஆயிரம் ஆகும். கையில் ஸ்டிக் ஏதும் பயன்படுத்தாமல் கண்ணாடி மட்டும் அணிந்து கொண்டு பார்வை இழந்தவர்கள் எளிதாக நடந்து செல்ல முடியும்.
இதை கண்டுபிடிக்க உதவிய பள்ளி தாளாளர் மூர்த்திராஜன், தலைமை ஆசிரியர் அதிபன், அறிவியல் ஆசிரியர் ஜெயந்த்குமார் ஆகியோர் எனக்கு ஆர்வம் கொடுத்ததுடன் பல்வேறு உதவிகளையும் செய்தனர் என்றார்.