/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சேதமடைந்த சுகாதார வளாகம்; அப்புறப்படுத்த நடவடிக்கை தேவை
/
சேதமடைந்த சுகாதார வளாகம்; அப்புறப்படுத்த நடவடிக்கை தேவை
சேதமடைந்த சுகாதார வளாகம்; அப்புறப்படுத்த நடவடிக்கை தேவை
சேதமடைந்த சுகாதார வளாகம்; அப்புறப்படுத்த நடவடிக்கை தேவை
ADDED : ஜன 15, 2024 11:27 PM

ஆண்டிபட்டி : புள்ளிமான்கோம்பை ஊராட்சி தர்மத்துபட்டியில் சேதமடைந்து பயன்பாட்டில்லாத சுகாதார வளாகக் கட்டடத்தை அப்புறப்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இப்பகுதியில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாடு திட்டத்தில் 20 ஆண்டுகளுக்கு முன் நவீன சுகாதார வளாகம் அமைக்கப்பட்டது. பழுதடைந்த சுகாதார வளாக கட்டடம் பயன்பாடு இன்றி மூடப்பட்டது. கட்டடம் தூர்ந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. பழுதடைந்த கட்டடத்தை ஒட்டி தர்மத்துப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுகிறது. பல்வேறு கிராமங்களில் இருந்து சிகிச்சை, மருத்துவ ஆலோசனைக்கு வரும் கர்ப்பிணிகள், பெண்கள், குழந்தைகள் இப்பகுதியில் பொது சுகாதார வளாகம் இன்றி சிரமப்படுகின்றனர். மேலும் சேதமடைந்த சுகாதார வளாகத்தை இடித்து அப்புறப்படுத்தி புதிய சுகாதார வளாகம் அமைக்க பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ஊராட்சி தலைவர் தவசி கூறியதாவது: ஆரம்ப சுகாதார நிலையம் அருகே பொது சுகாதார வளாகம் அமைக்க தற்போது போதுமான நிதி வசதி ஊராட்சியில் இல்லை. இதுகுறித்து அரசின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. நிதி கிடைக்கப் பெற்றதும் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.' என்றார்.