UPDATED : அக் 29, 2026 10:33 PM
ADDED : அக் 29, 2026 10:28 PM

கூடலுார்: மழையால் காஞ்சிமரத்துறையில் இருந்து வெட்டுக்காடு செல்லும் ரோடு குண்டும் குழியுமாக மாறியுள்ளது.
கூடலுார் காஞ்சிமரத்துறையில் இருந்து வெட்டுக்காடு செல்லும் ரோடு 2 கி.மீ., தூரம் கொண்டதாகும். வெட்டுக்காடு பகுதியில் 500 ஏக்கருக்கு மேல் நெல் சாகுபடி நிலங்கள் உள்ளன. மேலும் வாழை, தென்னை, இலவம், மா உள்ளிட்ட தோட்ட விவசாயமும் அதிகம் உள்ளது. அதனால் இந்த ரோடு விளை பொருள்களை ஏற்றி வருவதற்கு முக்கியமானதாக உள்ளது. இரண்டு ஆண்டுக்கு முன் சீரமைக்கப்பட்டு தார் போடப்பட்டது.
கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்த மழையால் ரோட்டின் துவக்க பகுதி உள்ளிட்ட பல இடங்களில் ரோடு சேதமடைந்து குண்டும் குழியமாக மாறியுள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் நெல் அறுவடை துவங்கவிருக்கும் நிலையில் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். கூடுதலாக சேதமடைவதற்கு முன் இதனை சீரமைக்க முன்வர வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
