/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குழாய் உடைந்து குடிநீர் பாலத்தில் தேங்குவதால் அபாயம்
/
குழாய் உடைந்து குடிநீர் பாலத்தில் தேங்குவதால் அபாயம்
குழாய் உடைந்து குடிநீர் பாலத்தில் தேங்குவதால் அபாயம்
குழாய் உடைந்து குடிநீர் பாலத்தில் தேங்குவதால் அபாயம்
ADDED : ஆக 22, 2025 02:38 AM

கூடலுார்:லோயர்கேம்ப் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் கூடலுார், கம்பம், காமயகவுண்டன்பட்டி, கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் சப்ளை செய்யப் படுகிறது.
லோயர்கேம்ப் முல்லைப் பெரியாற்றில் தண்ணீர் பம்பிங் செய்து அங்குள்ள ராட்சத நீர்த்தேக்க தொட்டிகளில் தேக்கி சுத்திகரிக்கப்பட்ட பின், அங்கிருந்து பகிர்மான குழாய் மூலம் குடிநீர் சப்ளை செய்யப் படுகிறது.
குறுவனத்துப்பாலம் அருகே குழாய் சேதமடைந்து பல நாட்களாக குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. முல்லைப் பெரியாற்றின் குறுக்கே உள்ள குறுவனத்துப் பாலத்தில் குளம் போல் தேங்கி நிற்பதால் பாலம் பலம் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக சீரமைக்க குடிநீர் வடிகால் வாரியம் உணர வேண்டும் என பொதுமக்கள் வலி யுறுத்தி உள்ளனர்.