/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விளையாட்டு மைதானம் அருகே ஆபத்தான மின் இணைப்பு
/
விளையாட்டு மைதானம் அருகே ஆபத்தான மின் இணைப்பு
ADDED : செப் 20, 2025 04:35 AM

தேனி: தேனி மாவட்ட விளையாட்டு அரங்க பகுதிகளில் ஆபத்தான முறையில் தெருவிளக்குகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
கலெக்டர் முகாம் அலுவலகம் அருகே மாவட்ட விளையாட்டு மைதானம் உள்ளது. இப் பகுதியில் இரும்பு மின் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறைந்த உயரத்தில் மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஆபத்தான முறையில் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. உயரமாக செல்லும் மின் லைனில் இருந்து மின் வி ளக்கிற்கு இணைப்பு வழங்க தனி ஒயர் பயன்படுத்தி உள்ளனர். ஒயர் இணைப்பு பகுதியில் டேப் கூட சுற்றாமல் இணைப்பு வழங்கி உள்ளனர்.
இரு மின் இணைப்பு ஒயர்களும் அருகில் உள்ள இரும்பு கம்பத்தில் உரசினால் மின்சாரம் பாய்ந்து அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த பகுதியில் பள்ளி மாணவர்கள், நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். அசம்பாவிதங்களை தடுக்க மின்வாரியத்தினர் உரிய பாதுகாப்பு முறையில் மின் விளக்கு வசதி செய்திட வேண்டும்.