/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தரமற்ற பணியால் ஆபத்தான தடுப்புச்சுவர்
/
தரமற்ற பணியால் ஆபத்தான தடுப்புச்சுவர்
ADDED : அக் 29, 2025 09:23 AM

தேனி: தேனி நேருசிலை அருகே தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட தடுப்பு சுவர் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
தேனி பழைய பஸ்ஸ்டாண்ட நேரு சிலை அருகே மதுரை ரோட்டில் இருந்து கம்பம் ரோடு திரும்பம் இடத்தில் சாக்கடை கால்வாய் உள்ளது.
அந்த இடத்தில் தடுப்புகள் இல்லாததால் வாகனங்கள் சாக்கடையில் விழுந்து விபத்து ஏற்படும் நிலை நிலவியது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் விபத்தை தடுக்கும் வகையில் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டது.
ஆனால் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் போது சாக்கடைகள் துார்வாராததால் கழிவுநீர், மழைநீர் ஆறாக ரோட்டில் ஓடின.
இதில் தடுப்புச் சுவரின் அடிப்பகுதி அரிப்பு ஏற்பட்டு தடுப்புச்சுவர் இடிந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி அதிகாரிகள் இணைந்து நேருசிலை பகுதியில் உள்ள சாக்கடைகளை துார்வாரி விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள சாக்கடை பள்ளங்களில் உறுதியான தடுப்புகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

