/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
லோயர்கேம்ப் மலைப்பாதையில் சாய்ந்து விழும் ஆபத்தான மரங்கள்; வனத்துறையின் மெத்தனத்தால் அகற்றுவதில் சிக்கல்

ADDED : ஆக 17, 2025 12:17 AM
கூடலுார்; லோயர்கேம்ப் மலைப்பாதையில் சாய்ந்து விழும் நிலையில் உள்ள ஆபத்தான மரங்களை அகற்றுவதில் வனத்துறையினர் மெத்தனம் காட்டி வருவதால் விபத்து அபாயம் உள்ளது.
லோயர்கேம்பில் இருந்து குமுளி வரை 6 கி.மீ., தூர ரோடு மலைப் பாதையாகும். பலத்த காற்றுடன் மழை பெய்யும் போது ரோட்டின் இரு பகுதிகளில் அடிக்கடி மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை வாகனங்கள் செல்லும்போது மரம் சாய்ந்து மிகப்பெரிய விபத்து ஏற்படவில்லை. இரண்டு மாதத்திற்கு முன்பு குமுளி பஸ் ஸ்டாப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மற்றும் பஸ் மீது மரம் சாய்ந்து லாரியில் இருந்த கிளீனர் பலியான சம்பவம் நடந்துள்ளது. ஏராளமான மரங்கள் சாய்ந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளன.
குமுளி மலைப்பாதை துவங்கும் இடத்தில் லோயர்கேம்ப் பென்னிகுவிக் மணிமண்டபம் உள்ளது. இதனை ஒட்டி அவுட் போலீஸ் ஸ்டேஷன் உள்ளது. இப்பகுதியில் மிகப்பெரிய வாகை மரம் ஆபத்தான நிலையில் உள்ளது. சில தினங்களுக்கு முன்பு பலத்த காற்றினால் கிளைகள் ஒடிந்து மின் கம்பியில் விழுந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. நேற்று முன்தினம் மேலும் சில கிளைகள் ஒடிந்து விழுந்து மின்கம்பி சேதமடைந்தது.
மிக உயரமான மரம் தற்போது சாய்ந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. ஒட்டியுள்ள அவுட் போலீஸ் ஸ்டேஷனில் பணியில் இருக்கும் போலீசார் அச்சத்துடன் பணியாற்றி வருகின்றனர்.
மேலும் வாகனங்கள் செல்லும்போது ரோட்டின் குறுக்கே மரம் சாய்ந்தால் மிகப்பெரிய விபத்து ஏற்படும். வனத்துறையினர் மரத்தை அகற்ற அனுமதி பெறுவதில் மெத்தனம் காட்டி வருவதால் வாகன ஓட்டிகள் புலம்பி வருகின்றனர்.