/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பழுதாகி நின்ற அரசு டவுன் பஸ் வெளியில் வரவில்லை என சமாளிப்பு
/
பழுதாகி நின்ற அரசு டவுன் பஸ் வெளியில் வரவில்லை என சமாளிப்பு
பழுதாகி நின்ற அரசு டவுன் பஸ் வெளியில் வரவில்லை என சமாளிப்பு
பழுதாகி நின்ற அரசு டவுன் பஸ் வெளியில் வரவில்லை என சமாளிப்பு
ADDED : அக் 16, 2024 04:38 AM

தேனி : தேனியில் அரசு டவுன்பஸ்கள் பழுதாகி நின்றிருந்த நிலையில் அந்த பஸ் டெப்போவை விட்டு வெளியே வரவில்லை என மேலாளர் தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
தேனி பெரியகுளம் ரோட்டில் நேற்று காலை 11:20 மணிக்கு (டி.என்.57 என். 2077) எண் கொண்ட தேனி டெப்போவிற்கு சொந்தமான அரசு டவுன்பஸ் எம்பெருமாள் கோயில் அருகே நின்றிருந்தது.
பெண்கள் இலவச பயணம் செய்யும் பஸ் 25 நிமிடங்களுக்கு மேலாக நின்றிருந்தும் பணியாளர்கள் யாரும் இல்லை.
இது பற்றி தேனி பஸ் டிப்போ மேலாளர் சுப்பிரமணியிடம் கேட்ட போது, 'ஆண்டிபட்டி- வத்தலகுண்டு வழித்தடத்தில் இயங்கும் புது பஸ் இன்ஜின் கோளாறு காரணமாக சீரமைக்க கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அதற்கு மாற்று பஸ்சாக (டி.என்.57 என். 2077) பஸ் மதியம் 2:00 மணிக்குதான் டெப்போவை விட்டு சென்றது.
காலை 11:20 மணிக்கு பெரியகுளம் ரோட்டில் பஸ் நின்றிருக்க வாய்ப்பில்லை என்றார்.