/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சி.ஐ.எஸ்.எப்., ஏட்டுக்கு கொலை மிரட்டல்
/
சி.ஐ.எஸ்.எப்., ஏட்டுக்கு கொலை மிரட்டல்
ADDED : அக் 31, 2024 03:00 AM
தேனி: உத்தமபாளையம் அனுமந்தன்பட்டி காவேரி தேவர் தெரு மணிகண்டன் 35. இவர் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையில் (சி.ஐ.எஸ்.எப்.,) நான்காவது பட்டாளியன் பிரிவில் ஏட்டாக உள்ளார். அனுமந்தன்பட்டியை சேர்ந்தவர் மகேந்திரன் 39.
இருவரும் ஒரேத் தெருவில் அருகருகே உள்ள வீடுகளில் வசிந்து வந்தனர்.
இதில் மகேந்திரன் வீட்டில் பயன்படுத்தும் ஏ.சி., மிஷினில் இருந்து வரும் தண்ணீர், மணிகண்டனின் வீட்டின் சுவரில் வழிந்தது. இதனால் இருவருக்கும் தகராறு நடந்து முன்விரோதம் ஏற்பட்டது.
இந்நிலையில் மணிகண்டன் தற்செயல் விடுப்பில் வீட்டிற்கு வந்தவர் சாமி கும்பிடச் சென்றார்.
அப்போது மகேந்திரன், திலக், அபினவ், அய்யனார், மற்றும் இருவர் என, ஆறுபேர் இணைந்து இரும்பு கம்பி, கற்களைக் கொண்டு மணிகண்டனை தாக்கினர்.
மணிகண்டன் புகாரில், மகேந்திரேன் உட்பட ஆறு பேர் மீது உத்தமபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.