ADDED : நவ 16, 2024 06:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி, : தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டி பெரிய வீட்டு தெருவைச் சேர்ந்தவர் முத்துக்காமாட்சி.
இவரது மகள் கல்லூரி மாணவி ஹர்சினி 19. வீட்டிலிருந்த இவரை அதே ஊர் மேலத்தெருவைச் சேர்ந்த காளி 36, என்பவர் கட்டையுடன் வந்து 'உனது தந்தையை வரச்சொல் என அவதூறாக பேசி,கொலை மிரட்டல் விடுத்தார்.' அருகில் இருந்தவர்கள் வந்தவுடன் சென்றார். இவரை இவரது தம்பி பழனிக்குமார் 33. தூண்டி விட்டுள்ளார் என மாணவி புகாரில் தேவதானப்பட்டி போலீசார் காளி, பழனிக்குமார் மீது வழக்கு பதிவு செய்தனர்.