ADDED : ஜன 25, 2024 05:57 AM
போடி: போடி அருகே ராசிங்கபுரம் கீழப்பட்டியை சேர்ந்தவர் ராஜன் 60. இவர் இங்குள்ள திருமூலம்மாள் கோயில் பூஜாரியாக உள்ளார. கோயிலுக்கு நன்கொடை மூலம் 11 பவுன் நகைகள் கிடைத்துள்ளது.
இந்த நகைகளை கோயில் பொருளாளராக உள்ள அழகர்சாமி பராமரித்து வந்துள்ளார். சில மாதங்களாக அழகர்சாமி விசேஷ நாட்களில் சுவாமி அலங்காரம் செய்வதற்காக நகைகளை அணிவிக்காமலும், கணக்கு காட்டாமல் இருந்துள்ளார். இது குறித்து பூஜாரி ராஜன், நிர்வாகத்தினரும் கூட்டம் போட்டு அழுகர்சாமியிடம் கணக்கு கேட்டுள்ளனர். நகைகளை அடகு வைத்ததாகவும், விரைவில் திருப்பி தருவதாக கூறியுள்ளார். பல மாதங்களாகியும் திருப்பி தராமல் இருந்துள்ளார். ராஜன் கோயில் நிர்வாகிகளும் நகைகள் குறித்து கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த அழகர்சாமி, சகோதரர்கள் ராமர், மணி, உறவினர் பழனி ஆகியோர் சேர்ந்து ராஜனை தகாத வார்த்தையால் பேசி, அரிவாளால் வெட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளனர். போடி தாலூகா போலீசார் அழகர்சாமி, ராமர் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.