ADDED : ஜூலை 05, 2025 12:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்; பெரியகுளம் ஸ்டேட் பாங்க் காலனி சுந்தர்ராஜ் நகரைச் சேர்ந்தவர் வேல்முருகன் 47. வீடு கட்டும் ஒப்பந்ததாரர். இவர் எ.புதுக்கோட்டையைச் சேர்ந்த ஜெயஸ்ரீ என்பவருடன் வீடு கட்ட ஒப்பந்தமானது. வீட்டிற்கு பூஜை செய்த பிறகு, ஜெயஸ்ரீ வேறு ஒருவர் மூலமாக வீடு கட்டும் பணியை துவங்கியுள்ளார். இதனால் இரு தரப்பினரிடையே நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.
இந் நிலையில் ஜெயஸ்ரீ அண்ணன் ஜெயபிரசாத், வேல்முருகனிடம் பிரச்னை செய்து கொலை மிரட்டல் விடுத்தார். வடகரை போலீசார் விசாரிக்கின்றனர்.-