/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அரசியல் கட்சி ஆலோசனை கூட்டத்தில் முடிவு
/
அரசியல் கட்சி ஆலோசனை கூட்டத்தில் முடிவு
ADDED : ஏப் 12, 2025 06:35 AM
தேனி : தேனியில் பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை ஒரு வாரத்திற்குள் அகற்றி கொள்ள நகராட்சி கெடு விதித்துள்ளது.பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கட்சி கொடிமரங்களை ஏப்.,21க்குள் அகற்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.
இதற்காக தேனி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வைக்கப்பட்ட கொடிமரங்களை அகற்றுவது தொடர்பாக அரசியல் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக்கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. நகர்நல அலுவலர் கவிப்பிரியா தலைமை வகித்தார். துணைத்தலைவர் செல்வம் முன்னிலை வகித்தார். தேசிய நெடுஞ்சாலைத்துறை இளநிலை பொறியாளர் தேவநாதன், மின்வாரிய உதவி பொறியாளர் துரைராஜ், தாலுகா ஆர்.ஐ., கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கட்சியினர் பேசியதாவது:
' இந்த உத்தரவிற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூ., சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம். எனவே, கொடிகம்பம் அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு அளிக்கிறோம் மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகி தர்மர் பேசினார்.
தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் முனியாண்டி,'கட்சி பொதுச்செயலாளர் அறிவித்தபடி கொடிக்கம்பங்களை நாங்களே அகற்றிவிடுகிறோம்,' என்றார்.
பட்டா நிலத்தில் கொடிகம்பங்கள் வைத்துக்கொள்ள அனுமதிப்படுமா என அ.ம.மு.க., மாவட்ட செயலாளர், காசிமாயன் கேள்வி எழுப்பினர்.கொடி கம்பங்கள் மட்டுமின்றி தொழிற்சங்கத்தினர் வைத்துள்ள பெயர் பலகைகளையும் அகற்ற வேண்டும் என நா.த.க.,வை சேர்ந்த விக்னேஷ் பாபு வலியுறுத்தினார்.
சலீம், நகரமைப்பு ஆய்வாளர்: பட்டா நிலத்தில் கொடிகம்பங்கள் அமைக்க கலெக்டரிடம் அனுமதி பெற வேண்டும். ஒருவாரத்திற்குள் கட்சியினர் தங்கள் கொடிகம்பங்களை அகற்றிட வேண்டும். அகற்றும் போது முன்னரே தகவல் தெரிவிக்கவும். மின்கம்பங்கள், வயர்கள் அருகில் சென்றால் முன்னேற்பாடுகள் எடுக்கப்படும். பலகைகளை அகற்ற உத்தரவு இல்லை. என்றார். கூட்டத்தில் அ.தி.மு.க., பா.ஜ., சார்பில் பங்கேற்கவில்லை.