/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் வாரம் ஒரு நாள் ஆப்பரேஷன் நடத்த முடிவு
/
வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் வாரம் ஒரு நாள் ஆப்பரேஷன் நடத்த முடிவு
வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் வாரம் ஒரு நாள் ஆப்பரேஷன் நடத்த முடிவு
வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் வாரம் ஒரு நாள் ஆப்பரேஷன் நடத்த முடிவு
ADDED : ஜூலை 15, 2025 04:10 AM
சின்னமனூர்: வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் வாரம் ஒரு நாள் ஆப்பரேஷன் செய்யவும், அதற்கு அனைத்து வசதிகளுடன் கூடிய ஆப்பரேஷன் தியேட்டர்கள் அமைக்கவும் முடிவு செய்துள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆரம்ப சுகாதார நிலையங்களை தவிர்த்து, அரசு மருத்துவமனகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஆப்பரேஷன் தியேட்டர்கள் உள்ளன.
இங்கு ஆப்பரேஷன் வழக்கமாக நடக்கிறது. ஆனால் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆப்பரேஷன் தியேட்டர்கள் இல்லை. வட்டார சுகாதார நிலையங்களில் ஆப்பரேஷன் தியேட்டர்கள் உள்ளன.
இங்கு ஆப்பரேஷன் பெரும்பாலும் நடப்பதில்லை. குடும்பநல அறுவை சிகிச்சைகள் மட்டும் மேற்கொள்ளப்படுகிறது.
கிராமங்களில் ஆப்பரேஷனுக்கு வருபவர்களை அருகில் உள்ள மருத்துவமனைகள் அல்லது மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு அனுப்பி வருகின்றனர். இந்நிலையில் குடும்ப நல அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டாம் என வாய் மொழி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருப்பதால் குடும்ப நல அறுவை சிகிச்சைகள் மேற்கொள்வது குறைந்தது.
எனவே வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் வாரத்தில் ஒரு நாள் அறுவை சிகிச்சை மேற்கொள்ள மாநில பொதுச் சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கென ஒவ்வொரு வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆப்பரேஷன் தியேட்டர் ஒன்றை நவீன வசதிகளுடன் ஏற்படுத்தவும், ஏற்கெனவே உள்ள தியேட்டரில் தேவையான வசதிகள் செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது.
அருகில் அரசு மருத்துவமனைகளில் உள்ள அறுவை சிகிச்சை சிறப்பு டாக்டர்களை வரவழைத்து அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் சிறிய ஆப்பரேஷன்கள் இனி வட்டார ஆரம்ப சுகாதார நிலைய அளவில் மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.