/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ராமேஸ்வரம்- - மதுரை ரயிலை போடி வரை நீட்டிக்க தீர்மானம்
/
ராமேஸ்வரம்- - மதுரை ரயிலை போடி வரை நீட்டிக்க தீர்மானம்
ராமேஸ்வரம்- - மதுரை ரயிலை போடி வரை நீட்டிக்க தீர்மானம்
ராமேஸ்வரம்- - மதுரை ரயிலை போடி வரை நீட்டிக்க தீர்மானம்
ADDED : நவ 23, 2025 03:35 AM
தேனி: ''ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை வரை இயக்கப்படும் ரயிலை போடி வரை நீட்டிக்க வேண்டும்.'' என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில் அதிகாரிகளை சந்திக்க உள்ளதாக கார்டமம் சிட்டி ரயில் பயணிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
போடியில் கார்டமம் சிட்டி ரயில் பயணிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் சங்க தலைவர் ஜான்ராஜேந்திரன் தலைமையில் நடந்தது.
நிர்வாகிகள் சரவணகுமரன், சஞ்சீவ்குமார், ஜெய்சன், ஆண்டனி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிர்வாகிகள் கூறியதாவது: போடியில் இருந்து காலையில் மதுரைக்கு ரயில், சென்னைக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும். ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை வரை இயக்கப்படும் ரயிலை போடி வரை நீட்டிக்க வேண்டும். தற்போது திருநெல்வேலி புருளியா ரயிலுக்கு புதிய ரயில் பெட்டிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.
தற்போது பயன்படுத்தப்படும் பெட்டிகளை வைத்து போடியில் இருந்து திருச்சி, விருதாச்சலம் வழியாக சென்னை எழும்பூருக்கு ரயில் இயக்க வேண்டும் உள்ளிட்ட 6 கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில் அதிகாரிகளிடம் மனு அளிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது., என்றனர்.

