/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பழைய ஓய்வூதிய திட்டத்தை வலியுறுத்தி முற்றுகையிட முடிவு
/
பழைய ஓய்வூதிய திட்டத்தை வலியுறுத்தி முற்றுகையிட முடிவு
பழைய ஓய்வூதிய திட்டத்தை வலியுறுத்தி முற்றுகையிட முடிவு
பழைய ஓய்வூதிய திட்டத்தை வலியுறுத்தி முற்றுகையிட முடிவு
ADDED : அக் 27, 2024 04:09 AM

தேனி : வீரபாண்டியில் அரசு ஆசிரியர்கள், மகளிர் ஊர் நல அலுவலர், மேற்பார்வையாளர் சங்க மாவட்ட கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் இளமுருகன் தலைமை வகித்தார். மாநில தலைவர் சங்கர்பாபு முன்னிலை வகித்தார்.
மாவட்ட செயலாளர் அய்யம்மாள், நிர்வாகிகள் காசம்மாள், சேகர், வரதராஜூலு, ராஜேஸ்வரி பங்கேற்றனர். கூட்டத்தில் தி.மு.க., தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தவாறு பழைய ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். மருத்துவக்காப்பீடு, குடும்ப ஓய்வூதியம் காலதாமதமின்றி ஆணை வெளியிட வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி 2025 மார்ச் 7 ல் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சமூக நலத்துறை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிடு வது என 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.