/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வலியுறுத்தல் அதிக மின் நுகர்வு திறன் கொண்டவர்களை இணைய சோலார் மின் திட்ட விழிப்புணர்வு தீவிரப்படுத்த முடிவு
/
வலியுறுத்தல் அதிக மின் நுகர்வு திறன் கொண்டவர்களை இணைய சோலார் மின் திட்ட விழிப்புணர்வு தீவிரப்படுத்த முடிவு
வலியுறுத்தல் அதிக மின் நுகர்வு திறன் கொண்டவர்களை இணைய சோலார் மின் திட்ட விழிப்புணர்வு தீவிரப்படுத்த முடிவு
வலியுறுத்தல் அதிக மின் நுகர்வு திறன் கொண்டவர்களை இணைய சோலார் மின் திட்ட விழிப்புணர்வு தீவிரப்படுத்த முடிவு
ADDED : ஜன 28, 2025 06:00 AM
தேனி: பிரதம மந்திரியின் சூரிய வீடு மின்சார திட்டத்தில் தேனி மாவட்டத்தில் அதிக மின் நுகர்வு கொண்டவர்களை இத் திட்டத்தில் இணைய வேண்டும் என்பதை வலியுறுத்தி நுகர்வோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மின்வாரியம் முடிவு செய்துள்ளது.
சூரியவீடு மின்சக்தி திட்டத்தில் மின் நுகர்வோர் இணைய https://pmsuryaghar.gov.in என்ற இணையத்தளம் மூலம் விண்ணப்பித்து, மின்வாரிய ஒப்புதல் பெற்று, அதன் பின் அங்கீகரிக்கப்பட்ட சோலார் பேனல் நிறுவனங்கள் மூலம் வீடுகளில் பேனல்கள் அமைக்கப்படும். இத்திட்டத்தில் பயனாளிகளாக சேர மாவட்டத்தில் இதுவரை 1271 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதில் 1044 பேர் பதிவு செய்து திட்டத்தில் இணைய ஒப்புதல் பெற்றுள்ளனர். 188 பேர் மட்டுமே ் வீடுகளில் பேனல் அமைத்து உற்பத்தியை துவக்கி உள்ளனர்.
நுகர்வோரின் மாத மின் நுகர்வு 150 யூனிட் வரை இருந்தால் 1 முதல் 2 கிலோவாட் திறனுள்ள சோலார் பேனல்கள் அமைக்கலாம். இதன் மூலம் தினமும் 4 யூனிட் உற்பத்தியாகும். இதற்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை அரசின் மானிய உதவி பெறலாம். 150 முதல் 300 யூனிட் வரை மின் நுகர்வு இருந்தால் 2 கிலோவாட் முதல் 3 கிலோவாட் திறனுள்ள சோலார் பேனல்கள் பொருத்திட வேண்டும். இதற்கு ரூ.60 ஆயிரம் முதல் ரூ.78 ஆயிரம் வரை மானியம் பெறலாம். 300 யூனிட் சராசரி அளவை விட கூடுதல் நுகர்வு இருந்தால் 3 கிலோ வாட் திறனுள்ள சோலார் பேனல் பொருத்தினாலும் மானிய உச்சவரம்பு ரூ.78 ஆயிரம் மட்டுமே வழங்கப்படும்.
தேனி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் (பொது) ரமேஷ்குமார் கூறுகையில், ‛மத்திய அரசு வழங்கும் மானியத்திற்கும், சோலார் பேனல் அமைப்பதற்கு ஆகும் செலவினங்களை கருதி நுகர்வோர் திட்டத்தில் இணைய தயங்குகின்றனர் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் மேற்பார்வை பொறியாளர் வழிகாட்டுதலில் 500 யூனிட் முதல் 800 யூனிட் வரையும், அதற்கு மேலும் நுகர்வுத்திறன் உள்ள நுகர்வோர்களை கணக்கெடுத்து அவர்கள் பயன்தரும் வகையில் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, திட்டத்தில் அதிக நுகர்வோரை இணைக்க விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம்.', என்றார்.

