/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சின்னமனூர் சின்ன வாய்க்கால் ஆக்கிரமிப்பு அளவீடு செய்ய முடிவு
/
சின்னமனூர் சின்ன வாய்க்கால் ஆக்கிரமிப்பு அளவீடு செய்ய முடிவு
சின்னமனூர் சின்ன வாய்க்கால் ஆக்கிரமிப்பு அளவீடு செய்ய முடிவு
சின்னமனூர் சின்ன வாய்க்கால் ஆக்கிரமிப்பு அளவீடு செய்ய முடிவு
ADDED : டிச 10, 2025 08:32 AM
சின்னமனூர்: சின்னமனூர் சின்ன வாய்க்கால் கரைகளில் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்றுவதற்கு, அளவீடு செய்யும் பணி மேற்கொள்ள வருவாய்த் துறை தயாராகி வருகிறது.
கம்பம் பள்ளத்துக்கில் முல்லைப் பெரியாறு பாசனத்தில் 14,707 ஏக்கரில், இருபோக நெல் சாகுபடி நடைபெறுகிறது. இருபோக பாசனத்திற்கு, 17 வாய்க்கால்கள் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்படும். இந்த வாய்க்கால்கள் தூர்வாராமல் செடி,கொடிகள் வளர்ந்தும், மண் மேடாகி ஆக்கிரமிப்பில் சிக்கியும் உள்ளது.
வாய்க்காலில் வரும் சாக்கடை குறிப்பாக சின்னமனூர் சின்ன வாய்க்கால் நெடுஞ்சாலையை ஒட்டி உள்ளது. உத்தமபாளையம் பைபாஸ் அருகில் துவங்கும் 8 கி.மீ. நீள வாய்க்கால், சின்னமனூர் பைபாஸ் துவங்கும் இடம் வரை உள்ளது. இந்த வாய்க்காலின் இரு புறமும் கரைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
சின்னமனூர் நகருக்குள் ஆக்கிரமிப்பு அதிகம். விவசாயிகள் வேளாண் விளைபொருள்களை கொண்டு வர முடியாமலும், இடுபொருள்களை வயல்களுக்கு கொண்டு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
நகரின் சாக்கடை கழிவு நீர் முழுவதும் வாய்க்காலில் விடப்படுகிறது. கரைகள் சேதப்படுத்தப்படுகிறது.
முதன்மை பொறியாளர் உத்தரவு சின்ன வாய்க்கால் ஆக்கிரமிப்புக்களை அகற்ற பல ஆண்டுகளாக நன்செய் பட்டதார் விவசாயிகள் சங்கம் போராடி வருகிறது. வருவாய்த்துறை அளவீடு செய்தால்தான் நடவடிக்கை எடுக்க முடியும் என நீர்வளத்துறை தெரிவித்தது.
நீர்வள துறையின் முதன்மை தலைமை பொறியாளர், மதுரை மண்டல தலைமை பொறியாளருக்கு சின்னமனூர் சின்ன வாய்க்கால் ஆக்கிரமிப்புக்களை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கவும், அது தொடர்பான தகவலை சின்னமனூர் விவசாய சங்கத்திற்கு தெரிவிக்கு மாறும் கூறி கடிதம் அனுப்பியிருந்தார்.
அந்த கடிதத்திற்கு பின் நீர்வளத்துறையினர் உத்தமபாளையம் தாசில்தாருக்கு, சின்னவாய்க்கல் கரையை அளவீடு செய்து தருமாறு கடிதம் கொடுத்துள்ளார்.
சின்னமனூர் விவசாயிகள் சங்க தலைவர் ராஜா கூறுகையில், நீர்வளத்துறை வருவாய்த்துறைக்கு கடிதம் எழுதியுள்ளது. அளவீடு செய்யும் பணியை வருவாய்த் துறை விரைந்து மேற்கொள்ள உள்ளதாக கூறியுள்ளனர்.
அளவீடு பணிகள் முடிந்தவுடன் ஆக்கிரமிப்புகளை நீர்வளத்துறை அகற்றும் என்றார்.

