/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
டிஜிட்டல் கிராப் சர்வே பணியில் கிராம உதவியாளர்கள் இணைப்பு ஒரு பதிவிற்கு ரூ.3 வழங்கவும் முடிவு
/
டிஜிட்டல் கிராப் சர்வே பணியில் கிராம உதவியாளர்கள் இணைப்பு ஒரு பதிவிற்கு ரூ.3 வழங்கவும் முடிவு
டிஜிட்டல் கிராப் சர்வே பணியில் கிராம உதவியாளர்கள் இணைப்பு ஒரு பதிவிற்கு ரூ.3 வழங்கவும் முடிவு
டிஜிட்டல் கிராப் சர்வே பணியில் கிராம உதவியாளர்கள் இணைப்பு ஒரு பதிவிற்கு ரூ.3 வழங்கவும் முடிவு
PUBLISHED ON : நவ 14, 2025 01:33 AM
கம்பம்:டிஜிட்டல் கிராப் சர்வே பணியில் வேளாண் துறையினருடன் கிராம உதவியாளர்கள் இணைந்து மேற்கொள்ளவும், ஒரு பதிவிற்கு ரூ.3 வீதம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
வருவாய் ஆவணங்களில் சிட்டா, அடங்கல் முக்கியமானது. சிட்டா நிலம் யாருக்கு உரிமையானது என்பதையும், அடங்கல் அந்த நிலத்தில் என்ன சாகுபடி செய்யப்பட்டுள்ளதை என்பதையும் தெரிவிக்கும்.
இரு ஆவணங்களும் உணவுப்பொருள் உற்பத்தியை சரியாக மதிப்பீடு செய்ய பயன்படுகிறது. 2003 ல் இந்த ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்க அரசு உத்தரவிட்டது. இந்த பணியை வேளாண் துறை, வி.ஏ.ஓ.க்கள், வேளாண் மாணவர்கள் மூலம் மேற்கொண்டாலும் நடைமுறைப்படுத்த இயலவில்லை. பின் தனியாரிடம் ஒரு பதிவிற்கு ரூ.20 வீதம் வழங்க அனுமதிக்கப்பட்டது. அதிலும் சிக்கல் ஏற்பட்டது. மீண்டும் வி.ஏ.ஓ.,க்களிடம் ஒப்படைக்க மாநில நிர்வாக வருவாய் ஆணையர் அமுதா, வி.ஏ.ஓ. சங்க நிர்வாகிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். கடந்த மாதம் மாநில வருவாய் நிர்வாக இணை ஆணையர் நாகராஜனுடன், வி.ஏ.ஓ.க்கள் சங்க மாநில தலைவர் சசிக்குமார், பொதுச்செயலாளர் குமார், பொருளாளர் தியாகராஜன் அடங்கிய குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதனால் ஏற்படும் பணிச்சுமை குறித்தும் விளக்கினர்.
வி.ஏ.ஓ.க்கள் சங்க முன்னாள் நிர்வாகி ராமர் கூறியதாவது: வி.ஏ.ஓ.,க்கள் சிரமத்தை உயர் அதிகாரிகள் ஏற்றுக் கொண்டனர். எங்களுக்கு பதிலாக வேளாண் துறையினருக்கு உதவ கிராம உதவியாளர்களை இணைத்துள்ளனர். கிராம உதவியாளர்களுக்கு ஒரு பதிவிற்கு ரூ.3 வீதம் வழங்கவும் சம்மதித்துள்ளனர். இனி கிராப் சர்வே பணிகளை உதவி வேளாண், தோட்டக்கலை அலுவலர்கள், அந்தந்த கிராம உதவியாளர்கள் மேற்கொள்ள உள்ளனர். விரைவில் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளது என்றார்.

