/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விவசாயிகளுக்கு மானியத்தில் 250 தார்ப்பாய்கள் வழங்க முடிவு
/
விவசாயிகளுக்கு மானியத்தில் 250 தார்ப்பாய்கள் வழங்க முடிவு
விவசாயிகளுக்கு மானியத்தில் 250 தார்ப்பாய்கள் வழங்க முடிவு
விவசாயிகளுக்கு மானியத்தில் 250 தார்ப்பாய்கள் வழங்க முடிவு
ADDED : அக் 02, 2025 11:53 PM
கம்பம்; தேனி மாவட்ட விவசாயிகளுக்கு 250 தார் பாய்கள் மானிய விலையில் வழங்கப்படும் என்று வேளாண் துறை அறிவித்துள்ளது.
வேளாண் துறை மூலம் விவசாயிகளுக்கு இடுபொருள்கள், உரம், பூச்சி மருந்துகள், விதைகள் மானிய விலையில் அரசு வழங்குகிறது. வேளாண் துறை மூலம் இந்த பொருள்கள் தரப்படுகிறது. 2025 --2026க்கான தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச் சத்து இயக்கம், பயறு வகைகள் திட்டத்தில் பயறு வகை சாகுபடியை ஊக்குவிக்கும் பொருட்டு விவசாயிகளுக்கு மானிய விலையில் தார் பாய் வழங்கப்பட உள்ளது.
மாவட்டத்தில் கம்பம், பெரியகுளம், தேனி வட்டாரங்களை தவிர்த்து உத்தமபாளையம், சின்னமனூர், போடி, ஆண்டிபட்டி, கடமலைக்குண்டு ஆகிய 5 வட்டாரங்களுக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. உத்தமபாளையத்திற்கு 10, சின்னமனூர் 90, போடி 50, ஆண்டிபட்டி 35, கடமலைக்குண்டு 65 என மொத்தம் 250 தார் பாய்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது. மானிய விலையில் வழங்கப்படும் என்றும் விரையில் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.