/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ரோட்டோர கடைகளுக்கு கட்டணம் நிர்ணயிக்க முடிவு
/
ரோட்டோர கடைகளுக்கு கட்டணம் நிர்ணயிக்க முடிவு
ADDED : அக் 15, 2025 12:50 AM
தேனி : தேனி நகர்பகுதியில் இயங்கும் ரோட்டோர கடைகளுக்கு அரசாணைப்படி கட்டணம் நிர்ணயித்து வசூலிக்க உள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதிகாரிகள் கூறியதாவது: தமிழக அரசு ரோட்டோர வியாபாரிகள் பாதுகாப்பு, முறைப்படுத்துதலுக்காக சில ஆண்டுகளுக்கு முன் சட்டம் இயற்றியது. இதன்படி நகர்பகுதியில் இடையூறு இன்றி உள்ள ரோட்டோர தள்ளுவண்டி கடைகளுக்கு ஆண்டிற்கு ரூ. 750 முதல் ரூ. 1500 வரை கட்டணம் நிர்ணயித்தது.
தேனி நகர்பகுதியில் சுமார் 1414 ரோட்டோர தள்ளுவண்டி கடைகள் கணக்கிடப்பட்டுள்ளன. அரசு நிர்ணயித்த கட்டணம் செலுத்துபவர்கள் அரசு ரோட்டோர வியாபாரிகளுக்காக செயல்படுத்தும் திட்டங்களில் எளிதாக பயனடைய இயலும் என்றனர்.