/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனியில் 2 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்க முடிவு
/
தேனியில் 2 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்க முடிவு
ADDED : அக் 17, 2024 06:14 AM
தேனி: தேனி நகர் பகுதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து கூட்ட நெரிசல், போக்குவரத்தை ஒழுங்கு படுத்த முடிவு செய்துள்ளனர்.
தீபாவளியை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பொது மக்கள், கேரள மாநிலத்தில் மூணாறு, குமுளி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ஜவுளிகள், மளிகைப் பொருட்கள், பண்டிகைக்கு தேவையான பொருட்கள் வாங்கிச் செல்ல தேனி நகர் பகுதிக்கு வருகை தருவர். இதனால் நகர் பகுதியில் அதிக அளவில் பொது மக்கள் கூடுவர். மேலும் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து காணப்படும். இந்தாண்டு தீபாவளிக்கு 15 நாட்களுக்கு முன்னதாகவே போலீசார் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கும் பணியை துவக்கி உள்ளனர்.
போலீசார் கூறுகையில், 'வார இறுதி நாட்களில் பொது மக்கள் அதிக அளவில் நகர் பகுதியில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இரு கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து கண்காணிக்க உள்ளோம். கண்காணிப்பு கோபுரங்கள் அதிகரிப்பது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் ஆலோசித்து, அமைக்கப்படும்,' என்றனர்.