/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மூணாறு ஊராட்சியில் காங்கிரசை சேர்ந்த தீபா தலைவராக தேர்வு மூன்று ஆண்டுகளில் ஐந்தாவது தலைவர்
/
மூணாறு ஊராட்சியில் காங்கிரசை சேர்ந்த தீபா தலைவராக தேர்வு மூன்று ஆண்டுகளில் ஐந்தாவது தலைவர்
மூணாறு ஊராட்சியில் காங்கிரசை சேர்ந்த தீபா தலைவராக தேர்வு மூன்று ஆண்டுகளில் ஐந்தாவது தலைவர்
மூணாறு ஊராட்சியில் காங்கிரசை சேர்ந்த தீபா தலைவராக தேர்வு மூன்று ஆண்டுகளில் ஐந்தாவது தலைவர்
ADDED : பிப் 16, 2024 06:24 AM

மூணாறு: மூணாறு ஊராட்சியில் காங்கிரசைச் சேர்ந்த தீபா தலைவராக தேர்வானார்.
மூணாறு ஊராட்சியில் 21 வார்டுகளில் கடந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் 11, இடது சாரி கூட்டணி 10 வார்டுகளில் வெற்றி பெற்று காங்., ஊராட்சியை கைப்பற்றியது.
11, 18 ஆகிய வார்டு காங்., உறுப்பினர்கள் 2022 ஜனவரியில் இடது சாரி கூட்டணியில் இணைந்ததால் காங்., நிர்வாகம் கவிழ்ந்தது. பின்னர் இடதுசாரி கூட்டணியை சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் 2023ல் காங்கிரசில் இணைந்ததால் அதன் பலம் மீண்டும் 11 ஆக அதிகரித்தது.
ராஜினாமா: காங்., கில் இருந்து விலகி இடதுசாரி கூட்டணியில் இணைந்த 18ம் வார்டு உறுப்பினர் தான் வகித்த தலைவர் பொறுப்பை 2023 ஜூனில் ராஜினாமா செய்தார். ஜூலை 14ல் நடந்த தலைவர் தேர்வில் காங்கிரஸ் உறுப்பினரின் ஓட்டு செல்லாததால் குலுக்கல் முறையில் நடந்த தேர்வில் இடதுசாரி கூட்டணியைச் சேர்ந்த 7ம் வார்டு உறுப்பினர் ஜோதி தலைவரானார்.
நீக்கம்: காங்கிரசில் இருந்து விலகிய இரண்டு உறுப்பினர்களை தேர்தல் கமிஷன் தகுதி நீக்கம் செய்ததால் இடது சாரி கூட்டணி எண்ணிக்கை 8 ஆக சரிந்தது. அதனால் ஊராட்சி தலைவருக்கு எதிராக காங்கிரஸ் உறுப்பினர்கள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் ஜன.30ல் வெற்றி பெற்ற நிலையில் நேற்று தலைவர் தேர்வுக்கான ஓட்டெடுப்பு தாலுகா புள்ளியியல் துறை அதிகாரி ஷிஜின் முன்னிலையில் நடந்தது.
தேர்வு: காங்., சார்பில் 3ம் வார்டு உறுப்பினர் தீபா, இடது சாரி கூட்டணி சார்பில் 7ம் வார்டு உறுப்பினர் ஜோதி ஆகியோர் போட்டியிட்டனர். அதில் 11 ஓட்டுகள் பெற்று தீபா தலைவராக தேர்வானார். தலைவராக தேர்வு செய்யப்பட்ட தீபா கடந்த ஜூலை 14ல் நடைபெற்ற தலைவர் தேர்வுக்கான ஓட்டெடுப்பின் போது அவரது ஓட்டு செல்லாமல் போனதால் ஊராட்சியை காங்கிரஸ் நழுவ விட்ட நிலையில் தற்போது தீபா தலைவரானார் என்பது குறிப்பிடதக்கது.
ஐந்தாவது தலைவர்: ஊராட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளில் தீபா ஐந்தாவதாக தலைவரானார். முதலில் காங்., சேர்ந்த மணிமொழி, அதன் பிறகு இடது சாரி கூட்டணியைச் சேர்ந்த பிரவீணா, ஜோதி ஆகியோர் தலைவராகினர்.
இறுதியாக ஊராட்சி துணைத் தலைவரான காங்கிரசைச் சேர்ந்த பாலசந்திரன் தலைவர் பொறுப்பு வகித்தார்.