தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/தேவதானப்பட்டியில் தீயணைப்பு நிலையம் அமைக்க கோரிக்கை

தேவதானப்பட்டியில் தீயணைப்பு நிலையம் அமைக்க கோரிக்கை

தேவதானப்பட்டியில் தீயணைப்பு நிலையம் அமைக்க கோரிக்கை


UPDATED : நவ 13, 2026 06:33 PM

ADDED : நவ 13, 2026 06:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 13, 2026 06:33 PM ADDED : நவ 13, 2026 06:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேவதானப்பட்டி: கொடைக்கானல் ரோடு டம்டம்பாறையில் அடிக்கடி விபத்துக்கள் நடப்பதால் மீட்பு பணிக்கு 30 கி.மீ., தூரமுள்ள பெரியகுளத்திலிருந்து தீயணைப்பு வீரர்கள் வரவேண்டிய நிலை உள்ளது. எனவே, தேவதானப்பட்டி பைபாசில் தீயணைப்பு நிலையம் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.

இந்திய அளவில் கொடைக்கானல் முக்கிய சுற்றுலா தலமாகும். கொடைக்கானலுக்கு மூன்று, நான்கு வழித்தடங்களில் வாகனங்கள் செல்கிறது. இதில் தேனி மாவட்டம் காட்ரோடு வழியாக சுற்றுலா பயணிகள் அதிகளவில் செல்கின்றனர். கொடைக்கானல்ரோடு டம்டம் பாறையில் அடிக்கடி வாகன விபத்துக்கள் நடக்கிறது. மீட்பு பணிக்கு பெரியகுளத்திலிருந்து தீயணைப்பு வீரர்கள் வரவேண்டியுள்ளது.

தீயணைப்பு நிலையம் அவசியம்:

கடந்த வாரம் தேவதானப்பட்டி பைபாஸ் ரோடு புல்லக்காபட்டியில் கேரளா சுற்றுலா பஸ் தீ பிடித்தது. பெரியகுளம், தேனி, வத்தலக்குண்டு தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைத்தனர். டம்டம்பாறை ரோட்டில் அடிக்கடி விபத்து நடக்கிறது. மீட்பு பணிக்கு பெரியகுளத்தில் இருந்து வருவதற்கு 45 நிமிடம் ஆகிறது. அதற்குள் பாதிப்பு அதிகரித்து உயிர் சேதமும் ஏற்படுகிறது. இதுபோன்ற ஆபத்தான நேரத்தில் உதவ தேவதானப்பட்டி பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை உள்ளது.

எனவே தேவதானப்பட்டி பைபாஸ் ரோட்டில் புதிதாக தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்திஉள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us