/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கூடலுாரில் டாஸ்மாக் கடைகளை இடமாற்றம் செய்ய வலியுறுத்தல்
/
கூடலுாரில் டாஸ்மாக் கடைகளை இடமாற்றம் செய்ய வலியுறுத்தல்
கூடலுாரில் டாஸ்மாக் கடைகளை இடமாற்றம் செய்ய வலியுறுத்தல்
கூடலுாரில் டாஸ்மாக் கடைகளை இடமாற்றம் செய்ய வலியுறுத்தல்
ADDED : மே 22, 2025 04:47 AM
கூடலுார்: கூடலுார் மையப் பகுதியில் இயங்கும் டாஸ்மாக் கடைகளை ஊருக்கு வெளியில் இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கூடலுார் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் வியாபார நிறுவனங்கள் அதிகம்.
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் மருத்துவமனைகள், மருந்து கடைகள் என அதிகம் உள்ளது. இதனால் மக்கள் நடமாட்டம் இப்பகுதியில் அதிகம்.
மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இப்பகுதியில் இரண்டு டாஸ்மாக் கடைகள் உள்ளன.
இதற்கு அருகிலேயே மதுபான பார்களும் உள்ளன. குடிமகன்கள் மது குடித்துவிட்டு அப்பகுதியில் சப்தமிடுவதும், சண்டையிடுவதும் வாடிக்கையாக உள்ளது.
இதனால் மக்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இது தொடர்பாக சில மாதங்கள் முன்பு கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பியிருந்தனர். ஆனால் எவ்வித நடவடிக்கையும் இல்லை. தற்போது பொறுப்பேற்றுள்ள கலெக்டர் ரஞ்சீத்சிங் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.