
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி நகராட்சி அலுவலக வளாகத்தில் 5வது வார்டு கவுன்சிலர் கிருஷ்ணபிரபா (அ.தி.மு.க.,) தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குப்பை அகற்றப்படாமல் சுகாதாரமின்றி காட்சியளிப்பதை கண்டித்தும், தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டெண்டரை ரத்து செய்ய வலியுறுத்தியும் கோஷமிட்டனர். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கமிஷனர் ஏகராஜிடம் மனு வழங்கினர். ஐந்தாவது வார்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

