
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை சேர்ந்த வக்கீல் கண்ணன் அரிவாளால் வெட்டப் பட்டதை கண்டித்தும், வக்கீல்களுக்கு பாதுகாப்பு சட்டம் இயற்ற கோரியும் போடியில் வழக்கறிஞர் சங்கம் சார்பில் கோர்ட் புறக்கணிப்பு, ஆர்ப்பாட்டம் நடந்தது.
சங்கத் தலைவர் கணேசன் தலைமை வகித்தார். செயலாளர் சந்திரசேகர், பொருளாளர் கோபிநாத், இணை செயலாளர்கள் பாண்டியராஜ், குமார், மாநில துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன் உட்பட வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர்.