ADDED : மார் 01, 2024 12:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : மாநில அளவில்வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இச் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட தலைவர் ராமலிங்கம் தலைமையில் ஆர்ப்பாட்டம்நடத்தினர்.
மாவட்ட செயலாளர் கண்ணன், பொருளாளர் சுரேந்திரன், துணைத்தலைவர் சிவன்காளை, இணைச்செயலாளர் ஒச்சாத்தேவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வருவாய்த்துறையினர் வேலை நிறுத்தத்தால் கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம்,ஆர்.டி.ஓ., அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
அலுவல் பணிகள் பாதிப்பிற்கு உள்ளாகின. நேற்று வருவாய்த்துறையினர் 183 பேர் அனுமதியின்றி விடுப்புஎடுத்தனர்.

