/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போடி - சென்னை ரயிலை தினமும் இயக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
/
போடி - சென்னை ரயிலை தினமும் இயக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
போடி - சென்னை ரயிலை தினமும் இயக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
போடி - சென்னை ரயிலை தினமும் இயக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 04, 2024 06:34 AM

தேனி: தேனி காமராஜர் நினைவு பஸ் ஸ்டாண்ட் அருகே ஐக்கிய கம்யூ., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் பெத்தாட்சி ஆசாத் தலைமை வகித்தார். போடி - சென்னை ரயிலை தினமும் இயக்க வேண்டும். மீறுசமுத்திரக் கண்மாய் கரையை பலப்படுத்தி பைபாஸ் ரோட்டிற்கு சென்று வர ரோடு அமைக்க வேண்டும். ஆண்டிப்பட்டி தென்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் முல்லைப் பெரியாற்றில் இருந்து புதிய கால்வாய் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மாநில செயற்குழு நிர்வாகி வீரபாலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீரையா, மாவட்ட துணைச் செயலாளர் செல்லன், பொருளாளர் முருகன், நிர்வாகிகள் வெங்கடேஷ், வெள்ளைப்பாண்டியன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில்பங்கேற்றனர்.