ADDED : அக் 10, 2024 07:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி கலெக்டர் அலுவலகம் முன் செப்., ஊதியம் வழங்க வேண்டும், ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறையில் தொகுப்பூதியத்தில் பணிபுரிபவர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டார் வளமைய ஆசிரியர்கள் பயிற்றுநர்கள் சங்க மாவட்ட பொறுப்பாளர் சிவசங்கர் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் தெய்வேந்திரன் முன்னிலை வகித்தார். உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கழக மாவட்ட தலைவர் மோகன், சிறப்பு பயிற்றுநர்கள் சங்க மகளிர் அணி நிர்வாகி தீப்தி, பகுதிநேர ஆசிரியர்கள் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குமரேசன், கணக்காளர்கள் சங்க நிர்வாகி ரமேஷ்பாபு உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

