ADDED : பிப் 07, 2024 12:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி தாலுகா அலுவலகம் முன் ஏ.ஐ.டி.யூ.சி., சார்பில் ரோட்டோர வியாபாரத் தொழிலாளர்களுக்கு 'பயோமெட்ரிக் கார்டு' முறையாக கணக்கெடுத்து வழங்க வேண்டும்.
நகராட்சிகளில் ரோட்டோர வியாபாரிகளுக்காக வழங்கிய தள்ளு வண்டி வழங்கும் திட்டத்தில் நடந்துள்ள முறைகேட்டை விசாரிக்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ரோட்டோர வியாபாரிகள் சங்க மாவட்ட தலைவர் கர்ணன் தலைமை வகித்தார். பொருளாளர் கணேசன் முன்னிலை வகித்தார். ஏ.ஐ.டி.யூ.சி., மாவட்ட பொதுசெயலாளர் ராஜ்குமார், மாவட்ட செயலாளர்கள் ஞானவேல், பிச்சமுத்து, மாவட்ட துணைத்தலைவர் சென்றாய பெருமாள், இந்திய கம்யூ., கட்சி செயற்குழு உறுப்பினர் தனலட்சுமி உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

