ADDED : பிப் 19, 2025 06:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : வருவாய் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், 'பணி நெருக்கடி, இ.பி.எம்.எஸ்., இணையதளத்தில் பணிப்பதிவேடு விபரங்களை பதிவேற்ற கால அவகாசம் வழங்க வேண்டும், துணை ஆட்சியர் பதவி உயர்வு பட்டியல் விரைந்து வெளியிட வேண்டும்',3 உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தாலுகா அலுவலகங்கள், கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தது.
கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் சுரேந்திரன், உத்தமபாளையத்தில் மாவட்ட தலைவர் ராமலிங்கம், போடியில் மத்திய செற்குழு உறுப்பினர் வேல்முருகன், ஆண்டிபட்டியில் மாவட்ட துணைத்தலைவர் சங்கர், பெரியகுளத்தில் மாவட்ட தலைவர் ஒச்சாத்தேவன், தேனி தாலுகா அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் முத்துராமன் தலைமையில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

