ADDED : நவ 07, 2024 02:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: அரசு போக்குவரத்து கழகத்தில் தனியார் மூலம் டிரைவர் பணிக்கு ஒப்பந்தம் கோரிய நடவடிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தியும் பழனிசெட்டிபட்டி அரசு பஸ் டெப்போ முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
தேனி கிளைத் தலைவர் முருகன் தலைமை வகித்தார். திண்டுக்கல் மண்டல சி.ஐ.டி.யூ., பொதுச் செயலாளர் ராமநாதன், இடை கமிட்டிச் செயலாளர் கணேஷ்ராம், சி.ஐ.டி.யூ., மாவட்டச் செயலாளர் ராமச்சந்திரன், திண்டுக்கல் மண்டலச் செயலாளர் பாக்கிய செல்வன், ஓய்வு பெற்றோர் நலக்குழு நிர்வாகி ராஜேந்திரன், திண்டுக்கல் சி.ஐ.டி.யூ., மண்டல துணைப் பொதுச் செயலாளர் மணிகண்டன் ஆகியோர் பேசினர். கிளைச் செயலாளர் பாலகிருஷ்ணன் நன்றி தெரிவித்தார்.