ADDED : நவ 13, 2024 07:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி பங்களாமேட்டில் மத்திய, மாநில எஸ்.சி., எஸ்.டி., அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில மகளிர் அணி செயலாளர் மாரியம்மாள் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் எட்டிராஜ், நிர்வாகிகள் கவுதம், நாகலட்சுமி, நாகராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நீதிமன்ற உத்தரவுப்படி காலிப்பணியிடங்களை சிறப்பு தேர்வு நடத்தி நிரப்பிட வேண்டும்.
பட்டியல் இனத்தவர் நிலத்தை போலி பட்டா, போலி பத்திர பதிவு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

