ADDED : மார் 07, 2024 06:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி கலெக்டர் அலுவலகம் முன் ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க மாநில துணைத்தலைவர் பேயத்தேவன் தலைமை வகித்தார்.
மாவட்டத் தலைவர் முருகானந்தம், ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட பொதுச்செயலாளர் ராஜ்குமார் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்கள் அனைவருக்கும் சம ஊதியம்நிர்ணயம் செய்ய வேண்டும், பணி நீக்கம் செய்யப்பட்ட துாய்மை பாரத இயக்க வாட்டார, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்குமீண்டும் பணி வழங்க வேண்டும். உள்ளிட்ட 6 கோரிக்கை களை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

