ADDED : அக் 31, 2025 02:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி:  புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயசுதாவை கண்டித்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில்  ஒன்றிய அலுவலகங்களில் மதிய உணவு இடைவேளை நேர ஆர்ப்பாட்டம் நடந்தது.
தேனியில் மாவட்ட துணைத்தலைவர் துவாஸ், ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் மாவட்ட இணைச் செயலாளர் திருப்பதி, ஆண்டிபட்டியில் சக்திதிருமுருகன், சின்னமனுாரில் அர்ஜூனன், பெரியகுளத்தில் முனிராஜ், உத்தமபாளையத்தில் சிவக்குமார், மயிலாடும்பாறையில் ரவிச்சந்திரன், கம்பத்தில் சதிஷ்குமார் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

