/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்
/
தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 27, 2024 08:10 AM

தேனி : மாவட்ட ஐக்கிய விவசாய முன்னணி , ஏ.ஐ.டியு.சி., தொழிலாளர் முன்னேற்ற சங்கம், அகில இந்திய ஐக்கிய தொழிற்சங்க மையம் உட்பட பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில், 'பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடந்தது.
பங்களாமேடு பகுதியில் துவங்கிய ஊர்வலம் பழைய பஸ் ஸ்டாண்ட், கம்பம் ரோடு அருகே நிறைவடைந்தது. அங்கு ஆர்ப்பாட்டம் நடந்தது. தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் மாவட்டச் செயலாளர் முருகன் தலைமை வகித்தார். ஏ.ஐ.டி.யு.சி., மாவட்டச் செயலாளர் ராஜ்குமார், விவசாய தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஏ.ஐ.யு.டி.யு.சி., மாவட்டச் செயலாளர் சத்தியமூர்த்தி, விவசாய விடுதலை முன்னணி மாவட்டச் செயலாளர் செல்வராஜ் ஆகியோர் பங்கேற்றனர். சி.ஐ.டி.யு., மாவட்டச் செயலாளர் ராமச்சந்திரன் நன்றி தெரிவித்தார்.