
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி கலெக்டர் அலுவலகம் நுழைவாயிலில் நாட்டு மாடு நலச்சங்க தலைவர் கலைவாணன் தலைமையில் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காமாட்சிபுரம் அழகாபுரியில் குடிநீர் வழங்க வேண்டும், குடிநீர் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
மேலும், கடன் வாங்கி தருவதாக கூறி பல லட்சம் ஏமாற்றிய பெண் மீதான புகார் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் கோஷமிட்டனர். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.