நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: கலெக்டர் அலுவலகம் எதிரே ஐக்கிய கம்யூ., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் கோபால் தலைமை வகித்தார்.
வீடு இல்லதாவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும், விவசாய நிலங்களில் மண் குவாரி என்ற பெயரில் கனிம வளங்கள் கொள்ளையடிப்பதை தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். நிர்வாகிகள் கணேசன், முருகன், சுந்தரம், அபுதாஹிர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.