நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி தாலுகா அலுவலகம் முன் தமிழக எஸ்.சி., எஸ்.டி., ஆணையத்தின் உத்தரவின் படி ராஜாகளத்தில் உள்ள இடங்களை இருதனி நபர்களுக்கு ஆவணங்களை மாற்றி தராததைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ., தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மா., கம்யூ., தாலுகா செயலாளர் தர்மர் தலைமை வகித்தார். நிர்வாகிகள் வெங்கடேசன், கண்ணன், நாகராஜ், ஜெயபாண்டி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் சுருளிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

