ADDED : ஜூலை 18, 2026 01:30 AM

அ நிறம் | அளவு
தேனி: தேனி கலெக்டர் அலுவலகம் முன் தோட்டக்கலை அலுவலர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப் பட்ட உழவர் அலுவலர் தொடர்புத்திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப் பாளர் பாண்டியன் தலைமை வகித்தார். மணிகண்டன் முன்னிலை வகித்தார்.
நிர்வாகிகள் சிவக்குமார், சரவணன், மாநில பொருளாளர் மோகன்ராஜ், அரசு ஊழியர் சங்க மாவட்ட நிர்வாகிகள் தாஜூதீன், முத்துக்குமார் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
