ADDED : செப் 22, 2026 04:41 PM
அ நிறம் | அளவு
தேனி, செப்.23–
தேனி பங்களாமேட்டில் தமிழர் தேசம் கட்சி சார்பில் மேகமலை, வருஷநாடு உள்ளிட்ட 102 கிராம மக்களை வெளியேற்றுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் கட்சி தலைவர் செல்வகுமார் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் வன உரிமை சட்டத்தை அமல்படுத்தவும் கோரினர். இதில் ஆண்டிபட்டி எம்.எல்.ஏ., மகாராஜன், விவசாய சங்க செயலாளர் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
