ADDED : செப் 22, 2026 04:52 PM
தேனி, செப்.23–வீரபாண்டி அரசு கலை, அறிவியல் கல்லுாரியில் ‘செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல், சைபர் பாதுகாப்பு, டிஜிட்டல் கணினியல் துறை வளர்ந்துவரும் போக்குகள்’ என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கம் நடந்தது.
கல்லுாரி முதல்வர் ஐயப்பன் தலைமை வகித்தார். கணினி அறிவியல் துறைத்தலைவர் சுல்தான் இப்ராஹிம் வரவேற்று, கணினி தொழில்நுட்பங்கள் முக்கியத்துவம் பற்றி பேசினார். ஓமன் தொழில்நுட்ப பல்கலை இணைப்பேராசிரியர் சலீம் ராஜா, வேலுார் வி.ஐ.டி., பல்கலை இணைப் பேராசிரியர் கனகராஜ் செயற்கை நுண்ணறிவு, இன்டர்நெட் ஆப் திங்ஸ் என்ற தலைப்புகளில் பேசினர். மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு கல்லுாரி மாணவர்கள், பிற மாநிலங்கள், நாடுகளில் படிக்கும் மாணவர்கள் நேரடியாகவும், ஆன்லைன் மூலமும் கருத்தரங்கில் பங்கேற்றனர். சிலர் ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.
